வெள்ளி, 2 டிசம்பர், 2011

ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தியதில் எடுக்கப்பட்ட முடிவுகள்


ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு;   

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.

இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும்.

வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும்.

அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும்.

விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள்.

இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது.

இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

வியாழன், 1 டிசம்பர், 2011

தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள 37 முதன்மை கல்வி அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ள இடங்களும் வருமாறு:-

1. பி.சுகுமார் தேவதாஸ்- புதுக்கோட்டை,
2. என்.ஆனந்தி- திருப்பூர்,
3. எஸ்.நாகராஜமுருகன்- மதுரை,
4. எஸ்.அசோகன்- கரூர்,
5. வி.குமார்- நாமக்கல்,
6. பி.ராணி- துணை இயக்குனர், சென்னை,
7. ஜி.மூர்த்தி- திண்டுக்கல் (எஸ்.எஸ்.ஏ.),
8. கே.சசிகலா- விருதுநகர்,
9. ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன்- நாகர்கோவில்,
10. கே.ராஜராஜன்- ஈரோடு.
11. எஸ்.செல்லம்- ராமநாதபுரம்,
12. ட்டி.மோகன்குமார்- திருவள்ளூர்,
13. எஸ்.சுகன்யா- தர்மபுரி,
14.எம்.எஸ்.பரிமளம் புதுக்கோட்டை(எஸ்.எஸ்.ஏ.),
15. பி.பொன்னையா- கோவை (எஸ்.எஸ்.ஏ.),
16. கே.செல்வக்குமார்- திருச்சி,
17. ப்பி.செல்வகுமாரி- காஞ்சீபுரம்,
18. ட்டி.ராஜேந்திரன்- கோவை,
19. எல்.டி.ரங்கநாதன்- தர்மபுரி (எஸ்.எஸ்.ஏ.).
20. பி.புண்ணியகோடி- விழுப்புரம்,
21. பி.குப்புசாமி- சென்னை,
22. பி.விஷ்ணு பிரசாத்- சிவகங்கை,
23. வி.ராதாகிருஷ்ணன்- சிவகங்கை (எஸ்.எஸ்.ஏ.),
24.பொன்குமார்- வேலூர்,
25. எம்.வாசு- நீலகிரி,
25. கே.ஸ்ரீதேவி- தேனி.
27. எஸ்.கே.விசுவநாதன்-ஈரோடு (எஸ்.எஸ்.ஏ.),
28. கே.பி.சீனிவாசன்- துணை இயக்குனர், பள்ளிக்கல்வி,
29.என். போஸ்- மதுரை (எஸ்.எஸ்.ஏ.),
30. பி.பகவதி நாடார்- திருநெல்வேலி,
31. கிரேஸ் பிராங்க்ளின்- திருவண்ணாமலை (எஸ்.எஸ்.ஏ.),
32. ஜி.ஜே.ராமச்சந்திரன்- நாகப்பட்டினம் (எஸ்.எஸ்.ஏ.),
33. சி.செல்வராஜ்- துணை இயக்குனர், தொடக்க கல்வி.
34. பி.கிரேஸ் சுலக்சனா ரத்தினாவதி- நாகர்கோவில் (எஸ்.எஸ்.ஏ.),
35. ஜே.சுதர்சன்- துணை இயக்குனர்,  மின் ஆளுமை
36. கே.ராமானுசம்- கிருஷ்ணகிரி,
37. எஸ்.தமிழ்மணி- சென்னை (எஸ்.எஸ்.ஏ.),

முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ள 19 பேரின் பெயர்களும், அவர்கள் ஏற்கவுள்ள புதிய இடங்களும் வருமாறு:-

1. எம்.கே.சுப்பிரமணியன்- தஞ்சை,
2. ஜி.மலர்க்கொடி- அரியலூர்,
3. எஸ்.சந்தான தஞ்சைவாணன்- நாகப்பட்டினம்,
4. எம்.சுப்பிரமணியன்- திருவாரூர்,
5. ஆர்.ஈசுவரன்- சேலம்,
6. எஸ்.வான்மதி- கடலூர் (எஸ்.எஸ்.ஏ.),
7. ஐசக் சுகிர்தராஜ்- தூத்துக்குடி (எஸ்.எஸ்.ஏ.),
8. ஆர்.சுப்பிரமணியன்- பெரம்பலூர்,
9. எஸ்.பூபதி- விழுப்புரம் (எஸ்.எஸ்.ஏ.).
10. சி.ஜெயலட்சுமி- ராமநாதபுரம் (எஸ்.எஸ்.ஏ.),
11. ஜி.சீதாராமன்- பெரம்பலூர் (எஸ்.எஸ்.ஏ.),
12. எஸ்.மதி- வேலூர் (எஸ்.எஸ்.ஏ.),
13. எஸ்.ருக்மணி- தூத்துக்குடி,
4. எ.நூர்ஜகான்- திருவண்ணாமலை,
15. கே.ஜி.மல்லிகா- காஞ்சீபுரம் (எஸ்.எஸ்.ஏ.),
16. வீ.பிரபாகரன்- திண்டுக்கல்,
17.ஆர்.வைத்தியலிங்கம் திருவாரூர் (எஸ்.எஸ்.ஏ.),
18. எம்.ரவிச்சந்திரன்- சேலம் (எஸ்.எஸ்.ஏ.).
19. சி.ஜோசப் அந்தோணி ராஜ் - கடலூர்,

சமச்சீர்க் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமச்சீர் கல்வி முறை (சமச்சீர் கல்வி; சமச்சீர்க் கல்வி) என்பது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறையாகும். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை செயல்படுத்தப்படப்போகும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்குகிறது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். 2010-11 கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கும், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்திடவும் திமுக தலைமையில் பதவி வகித்த தமிழக அரசு முடிவுசெய்திருந்தது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு பாடங்கள் தரமானதாக இல்லை என்றும் மறுஆய்வுக்குப் பின் அவை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.[1] இவ்வழக்கின் மீது 10 சூன், 2011 அன்று கூறப்பட்ட தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.[2]இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 13 சூன், 2011 அன்று செய்தது. அவ்வழக்கில் கல்வியாளர்கள் எதிர்த்தரப்பாகத் தங்களையும் விசாரிக்கக் கோரி மனு தொடுத்தனர். இவ்வழக்கில் 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியைத் தொடரச் சொல்லியும் இதர வகுப்புகளுக்குத் தேவையா என நிபுணர்குழு அமைக்குமாறும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.[3] அதன்படி அமைக்கப்பட்ட நிபுணர்குழு சமச்சீர்ப் பாடநூல்கள் தரமற்றவை என்று அறிக்கையளித்தது. இதனைக் கொண்டு மாநில அரசு மீண்டும் சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தைக் கைவிட்டது. ஆனால் ஜூலை 18, 2011 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துமாறு ஆணையிட்டுத் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லாது எனவும் அறிவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஜூலை 19, 2011 அன்று மேல்முறையீடு செய்தது.[4] எனினும் இவ்வழக்கில் சமச்சீர்க் கல்வியை நடப்புக் கல்வியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் எனவும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தரவேண்டும் என்றும் ஆனால், தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சமச்சீர்க் கல்விப் பாடநூல்களைத் தருவதற்கு ஆகஸ்ட் 10 இறுதிநாளாக்கப்பட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிவடைந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.[4] இறுதித் தீர்ப்பு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், "சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[4]

பொருளடக்கம்

 [மறை

[தொகு] வரலாறு

2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. 2006 தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கையும், இது தொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.[5]

[தொகு] தாய்மொழிக் கல்வி

முத்துக்குமரன் தலைமையிலான குழு சமர்ப்பித்த 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக "பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன." தாய்மொழி கல்வித் திட்டத்தை அரசு கைவிடக் காரணம், அதற்கு மக்களிடம் ஆதரவு இல்லாத சூழல் ஆகும்.[6] இந்தச் சூழலுக்கு காலனித்துவம், பொருளாதாரம், கல்வி வணிக மயப்படுத்தப்படல், அரச கொள்கைகள் என பல காரணங்கள் உண்டு.

[தொகு] அறிமுகப்படுத்துவதற்கான காரணங்கள்

ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்புப் பாடநூல்கள்
நான்குவகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் தவிர்ப்பதற்காக இத்திட்டம் கல்வியாளர்களால் ஆராயப்பட்டு அவற்றை நீக்கும் எண்ணத்துடன் அறிமுகப்படுத்தபட்டது.

[தொகு] கருத்துக்களும் எதிர்கருத்துக்களும்

சமச்சீர்க் கல்வித் திட்ட செயலாக்கம் குறித்து ஆதரவான மற்றும் எதிர்நிலைகள் எடுக்கப்பட்டன.
சார்புக் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள்
ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் (Content) பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம்சங்களைத் தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும். இப்படிப் பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படுவதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதற்குத் தமிழக அரசு எந்த ஒரு தனிப்பட்ட காரணத்தையும் சொல்லவில்லை.
புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். இது போன்ற விவாதங்கள் அனைத்து வகைப் பள்ளிகளையும் (வாரிய பள்ளிகளையும்) சேர்ந்தவர்களை கலக்காமல் அரசுப்பள்ளிகளில் கல்வி கற்றவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மட்டும் நடத்தப்பட்டது.
பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு - சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும். பாடத்திட்டம் என்பது வேறு, அதைக் கற்பித்தல் என்பது வேறு என்பதை கருத்தில் கொள்ளாமல் அரசு எடுத்த நடவடிக்கைள் இது என எதிர்க்கப்பட்டது.
பாடத்திட்டம், பாடநூல்கள் குறித்து ஒளிவுமறைவின்றி (Transparent Method) பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும். பாடத்திட்டம், பாடநூல்கள் என எவையும் எங்கும் ஒளிவு மறைவுடன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளபடி, பயிற்றுமொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும். எப்பொழுதும் பயிற்றுமொழியாகத் தமிழ் தொடரவேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை.

[தொகு] நீதிமன்ற வழக்குகள்

அதிமுக தலைமையிலான அரசு 2011 ல் பதவியேற்றபின் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து ஏனைய வகுப்புகளுக்கு இவ்வருடம் சமச்சீர்கல்வியை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. அதோடு நில்லாமல் பழைய புத்தகங்களை குறுகிய காலத்தில் அச்சடிக்க புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஏற்கெனவே ரூxxx கோடி செலவில் சமச்சீர் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அரசு குழு அமைத்து ஒருவாரகாலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய அறிவுறுத்தியது.
அதனைத்தொடர்ந்து தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி ஆய்வுக்குழுவின் பரிந்துரையை உயர்நீதிமன்றம் ஜூலை 18 அன்று நடைபெற்ற அமர்வில் தள்ளுபடி செய்தது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே எல்லா வகுப்புக்கும் அமல்படுத்த ஆணையிட்டது. மேலும் மாணவர்களுக்கான புத்தகங்களை சூலை 22க்குள் விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேசமயம் ஆட்சேபனைக்குரிய பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருந்தால் அதை தெளிவுபடுத்தும் வகையில் குழு அமைத்து மாற்றம் செய்து துணைபட்டியல் இணைப்பாக தயார் செய்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.[7]
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சூலை 19 அன்று மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஷியாம்சுந்தர், மணிமேகலை, சேஷாத்திரி உள்பட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு? தாக்கல் செய்தனர்.[8]
இதன் தீர்ப்பு சூலை 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு தடை வித்திக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ந்தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை சூலை26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [9]
இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4உடன் முடிந்த தருவாயில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 9 அன்று காலை வழங்கப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம், "சமச்சீர்க் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் சமச்சீர்க் கல்வி முறையை 10 நாட்களுக்குள் வழக்கில் கொண்டுவர வேண்டும்" என்றும் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் 25 காரணங்களை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[4]

[தொகு] சிறுபான்மை மொழிகள்

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, கன்னடம், தெலுங்கு போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் வந்தது. அம்மொழிகளும் சமச்சீர் கல்வியில் இடம்பெறவேண்டும் என்று தமுமுக போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 'உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும் என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.[10]

ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



5 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

இந்நிலையில், "தமிழகத்தில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என, 2008ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில அளவிலான வேலைவாய்ப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை, அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, எழுத்துத் தேர்வு அடிப்படையில், நியமனம் செய்யப்படுவர்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். தேசிய கவுன்சில் வகுத்துள்ள கல்வித் தகுதி உள்ளவர்கள் தான், ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

தேர்வு முறை

* தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

* இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

* முதல் தாள், மொத்தம் 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும்.

* இரண்டாம் தாள், 150 கேள்விகள் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.

* அறிவியல் ஆசிரியர்களுக்கு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து 60 கேள்விகளும், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, அதில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். எனினும், பள்ளி நிர்வாகம், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு, இடஒதுக்கீடு கொள்கையின்படி, சலுகைகள் வழங்கலாம். இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, கல்வியியல் ஆணையமாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் தொடக்கக் கல்விக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
  
  தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

இதுதவிர, இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆணையம் வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த தகுதியை பெற வேண்டும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.